tamil cinema news

Monday, January 30, 2012

சந்திரகாந்தனின் சுவிஸ் விஜயமும் மக்களுடனான கலந்துரையாடலும்.


ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அந்த சந்திப்பில மக்களின் மத்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியின் தலைவருமாகிய சந்திரகாந்தன் உரையாற்றினர்.

அங்கு புலம்பெயர்ந்த  மக்களின் மத்தியில் முதலமைச்சர் உரையாற்றுகையில்,




கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்தியும் மற்றும் கட்சியின் கொள்கைகளையும் விளக்கினார்.

Sunday, January 29, 2012




news








மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கி இருந்த மக்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்கா அரசின் அழுத்தம் காரணமாக இவர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தவுமுள்ளது.
சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் போது பாதிக்கப்பட்ட மக்கள் என்று கருதப்படும் இந்த மக்கள் மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் தங்கி இருந்து வேறு நாட்டிற்கு சென்றால் அவர்கள் சிறீலங்கா அரசின் போர்குற்றங்களையும் தற்போது நடக்கும் நிலமைகளையும் அறிவித்துவிடுவார்கள் என்ற காரணத்தால் அந்நாட்டு அரசுடன் சிறீலங்கா அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க 200 ஈழத்தமிழர்களையும் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் கட்டாய நடவடிக்கையில் அங்குள்ள அதிகாரிகளும் அந்நாட்டு அரசும் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மக்களில் பன்னாட்டு மனிதஉரிமை நீதிக்கும் சட்டத்திற்கும் மாறாக அந்நாட்டு அரசாங்கமும் அதிகாரிகளும் நடந்துகொள்கின்றார்கள் அனைவரையும் சிறீலங்கா செல்லுமாறு அதிகாரிகள் வற்புறுத்தி வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆண்கள் 3 பேரை கைதுசெய்து நிர்வாணப்படுத்தி சிறையில் அடைத்து சித்திரவதைசெய்வதுடன் அவர்களைபோல் ஏனையவர்களுகம் நாடுசெல்ல எதிர்ப்பு தெரிவித்தால் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
டோகோ பகுதியில் கைதுசெய்யப்பட்ட 200 ஈழத்தமிழர்களை விளையாட்டு திடலில் நுளம்புவலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். எதுவித மனிதநேய நிறுவனங்களும் தொடர்புகொள்ளாத வகையில் கைதுசெய்யப்பட்டவர்களின் தொடர்பாடல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட நிலையில் சித்திரவதைகளை மேற்கொள்கின்றார்கள்.




சிறீலங்கா அரசின் அழுத்தம் காரணமாக இவ்வாறான சித்திரவதைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த மக்களை மீட்க மனிதநேய அமைப்புக்கள் முன்வரவேண்டும் என்று கைதுசெய்யப்படடு சித்திரவதைக்குள்ளாகிய மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

மட்டக்களப்பில் பகல் கொள்ளை! மோப்ப நாயுடன் பொலிஸார்.


மட்டக்களப்பு நகரை அண்மித்த பூம்புகார்ப் பகுதியில் நேற்று பகல் வேளையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டின் யன்னலை உடைத்து, இரண்டு இலட்சத்து 94ஆயிரம் ரூபா பெறுமதியான நகையும் 3000 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளையினைப் பிடிப்பதற்கு மட்டக்களப்புப் பொலிஸ் நிலைய குற்றப்புலன்விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி த.சாந்தகுமார் தலைமையிலான குழுவினர் போப்பநாயுடன் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.



மட்டக்களப்பில் அண்மைக் காலமாக இடம்பெற்ற வரும் பகல் கொள்ளை தொடர்பாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவிக்கையில், ஆட்கள் இல்லாத வீடுகளிலேயே இக்கொள்ளை இடம்பெற்று வருவதாகவும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டு. காத்தான்குடி கடலில் கரையொதுங்கியுள்ள பாரிய திமிங்கிலம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரிய திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது.
அதிகாலை வேளை 2 மணியளவில் இத்திமிங்கிலம் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தினர்.

16 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட இத்திமிங்கிலத்தைக் கரைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள திமிங்கிலத்தை மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் சென்று பார்வையிட்டுவருகின்றனர்.